இருளில் ஆழ்ந்திருந்தது
என்வீடு.
எதிரே மின் கம்பத்தில் ப்யூஸ் போச்.
எதிர்த்த வீட்டை
எட்டிப்
பார்த்தேன். அப்பாடா !
அங்கும் கரண்ட் இல்லை . . .
மாலையில் வந்த EB லைன்மேன்
மளமளவென்று கம்பம் ஏற இரண்டு வீட்டிலும்
எரிந்தது விளக்கு.
''பெரியவுகளே . . !''
எனப்
பெருங்கும்பிடு போட
எதிர் வீட்டுப் பெரியவர்
ஈந்தார் ஐம்பது.
எனக்கும் கூட
இரண்டு சலாம் கிடைத்தது
நானும் போட்டேன்
சலாம் மட்டும்!
'அட அற்பப் புழுவே . .'
என்பது போல
என்னைப் பார்த்தான்
இழிவாய் இழிவாய்.
எதிர் வீட்டில் சிறுபையன்
சத்தம் போட்டுப் படித்தான்
இட்டார் பெரியோர்
இடாதார் இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி