ஐந்தாம் தமிழ்
என்ன சொல்லப் போகிறான் இவன், இயற்றமிழ், இசைத்தமிழ். நாடகத்தமிழ் என்ற முத்தமிழைப்
பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.
மிஞ்சி மிஞ்சிப் போனல் நான்காம் தமிழ் என்று கணித்தமிழ் உருவாகிக் கொண்டிருக்கிற
இந்தக் காலத்திலே எங்கிருந்து வந்தது இந்த ஐந்தாம் தழிழ் என்றால நான் சொல்லப் போவது
கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும்.
'பெட்டியிலே உலவாத பொரும் பொருள் உண்டு இது நீ
பெரறக என அது திறக்கும் பெருந்திறவு கோலும்
எட்டு இரண்டே அறியாத என் கையில் கொடுத்தீர்
இது தருணம் தொடங்கி அதை எடுக்க முயல்கின்றேன் !'
என்று வரும் வள்ளல்பிரான் பாட்டிலே ஒரு பெட்டி வருகிறது. அதிலே ஒரு பொருள்
இருப்பதும் தேரிகிறது. பாட்டிலும்தான். அதை இறைவன் அவருக்குக் கொடுத்ததாகவும்
தெரிகிறது. அதைத்திறக்க வள்ளல் பிரான் பட்ட சிரம்மும் புரிகிறது. அது எல்லாம் மிகப்
பெரிய விஷயம். அவரும் அவரது அருட்சோதிப் பெம்மானும் சம்பந்தப் பட்ட விஷயம். நம்
வீட்டுக்கு வாருங்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் பெட்டிகள் உண்டு. பெட்டியிலே புடவை உண்டு நகை உண்டு அது போல்
ஐந்தாம் தமிழும் உண்டு.
'அட போங்க சார், எங்கள் வீட்டுப் பெட்டியில் தேவாரம் திருவாசகமே இல்லை. ஐந்தாம்
தமிழுகெகு எங்கே போக ?' கேட்கலாம் நீங்கள். சொல்லப் போகிறேன் நான்.
இயற்றமிழின் உயிரோ ஊசல் ஆடிக்கொண்டிருக்கிறது. இசைத்தமிழோ நம் சினிமா இசை
அமைப்பாளர்கள கைவண்ணத்தில் ஆரவாரமான இடியாகி முதல் தமிழ் சத்தமே எழும்ப விடாமல்
அமுக்கிக் கொண்டிருக்கிறது. நாடகத் தமிழோ ,
நாடகமே காணோம் தமிழுக்கு எங்கே போக என்று கேட்கம் அளவுக்கு ஆய்விட்டது.
'நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடவான் மிகப்பெரிதும் விழைகின்றேன் . . .'
இது திருவாசகம்.
'நாடகம் எல்லாம் கண்டேன் உன் பாடும் விழியிலே . . . '
இது மதுரைவீரன் படப் பாடல். என்ன தெரிகிறது என்றால் மணிவாசகர் காலத்தில் இருந்து
கண்ணதாசன் காலம்வரை நாடகம் இருந்தது தெரிகிறது. இப்போது நாடகத்தையும் காணோம் நாடகத்
தமிழையும் காணோம்.
சிந்தனைகள்
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .