மாறுகிறது, மாறுகிறது, எல்லாமே மாறுகிறது. மொழி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
இன்றையத் திருக்குறள் மூலத்தை அப்படியே எடுத்துக் கொண்டு போய்க் கடைச்சங்க
காலத்துத் திருவள்ளுவரிடம் காட்டினால் அவரே வாசிக்கத் திணறி விடுவார்.
இல்லை அய்யனே இது நீங்கள் எழுதியதுதான் எனச் சத்தியம் செய்தாற் கூட நம்புவாரோ
என்னவோ? அவர் காலத்து மன்னன் கானப் பேர் எயில் கடந்த உக்கிரப் பெரு வழுதியோ இன்னும்
ஒருபடி மேலே போய், நமது பேண்ட்டையும் சட்டையையும் பார்த்து வெருண்டு, ஏதோ தூர தூர
தேசத்துச் சட்டைக்கார ஒற்றன் எனப் பயந்து,
காராகிருகத்தில் அடைத்தாலும் அடைத்துவிடுவான்.
ஒரே வழி மிகத் தூய அன்னை மொழியாம் செந்தமிழில செப்புனால் தப்பித்தீர்கள்,
அதைவிட்டு, அட, வள்ளுவன் நமது மயிலாப்பூர்க் கார்ர்தானே
எனப் பற்று மிகக் கொணடு சென்னைத் தமிழில் பேஸ்னீர்களோ தொலைந்தீர்கள்.!
ஆக, என்ன சொல்ல வருகிறேன் என்றால்,
காலா காலம் நிலைத்திருப்பது, மாறாமல் இருப்பது எழுத்து அல்ல, பேச்சு அதாவது ஒலி
மட்டுமே. திருக்குறள் அவர்காலத்திலும் அப்படித்தான் உச்சரிக்கப் பட்டது, இன்றும்
அப்படியே படுகிறது, வருங்காலத்தும் அவ்வாறே படும். சத்தம் பெரிதா, வடிவம் பெரிதா
என்றால் சத்தம்தான் பெரிது.
A sound mind in a sound body என்பதை A shaped mind in a shaped body என்று
சொல்லிப் பாருங்கள்,
அசிங்கமாக இல்லை ? Initially there was word, the word was with God and the word
was God
என்கிறது பைபிள். நமது சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது? நாதத்தில் இருந்து அண்டம்
தோன்றியது என்கிறது. அது எப்படி, காற்று இல்லாத அண்டவானில் நாதம் எங்ஙனம்
பிறக்கும், எப்படிப் பரவும் என்ற அறிவு ஆராய்ச்சி எல்லாம் இப்போது வேண்டாம். அந்த
நாத வடிவான ஓங்கார தத்துவனுக்கு எம் கோடானுகோடி போற்றிகள்.
சிந்தனைகள்
- 1 .ஆகா பாடலாம்
- 2. மெல்லத் தமிழ் - 1
- 3. மெல்லத் தமிழ் - 2
- 4. மெல்லத் தமிழ் - 3
- 5. பொற் கொடி
- 6. முக்திப் பால்
- 7. உலகப் பொது மறை
- 8. கோணல் பார்வை
- 9. மனோ சக்தி
- 10.முப் பால்
- 11.நான் யார்?
- 12.நியூஸ்
- 13.பண்-பாடு
- 14.பிப்ரவரி-14
- 15.ஐந்தாம் தமிழ்
- 16.திட்டு
- 17.இயற்கை
- 18.ஏன் மறந்தோம்
- 19. குறளில் ஏழு
- 20. பிறந்தநாள்
- 21. வையுங்கள்
- 22. கவிதை
- 23. பெரிது பெரிது
- 24. ஐந்தாம் தமிழ்
- 25 .நடராசர்
- 26. கழுதை
- 27. பேசன் ப்ளஸ்
- 28. முட்டை
- 29. முதுகு தரிசனம்
- 30. பெரிது பெரிது
- 31. 50 ரூபாய்
- 32. நாதம்
- 33. மாடக்குழி
- 34. அபிராமி கோவில்
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .
- .