tamil pages of magudadheeban 
 

SEVEN

ஏழாம் எண்ணுக்கும் திருக்குறளுக்கும் ஏகப்பட்ட சம்பந்தம். அப்படி என்ன என்கிறீர்களா ?
திருவள்ளுவர் என்ற வார்த்தையிலேயே ஏழு எழுத்துக்கள். திருக்குறளுக்கு இன்னோரு பேர் உண்டு. வாயுறை வாழ்த்து. அதில் உள்ள எழுத்துக்களும் ஏழு.

சரி அதை எல்லாம் விடுங்கள். மொத்தம் எத்தனை அதிகாரம், 133.
இதன் கூட்டுத்தொகையும் ஏழு.
இந்த 133 என்ற எண்ணிலும் ஒரு சிறப்பு உணடு. இது ஏழால் மீதம் இன்றி வகுபடும் எண்.

ஒவ்வொரு குறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவம் ஏழுபகுதிகளாக வரும்.
பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் மொத்தம் 70.
காமத்துப்பாலிலோ 25 அதிகாரங்கள்
கூட்டிப் பாருங்களேன், ஏழுதான் வரும்.

வள்ளுவர் தன் பாக்களிலே பயன்படுத்தியளள்ள அதிகபட்ச அதாவது மிகவும் உச்ச மதிப்பு எண் எழுபது கோடி.
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் - என்பது அமைச்சியலில் ஒரு குறள்
இதில் எழுபது கோடியை -டென்டு தி பவர் செவன் - என எழுதலாம்.
வள்ளுவர் பிறப்புக்களின் வகைகளைப் பற்றிக் கூறும்போது அதுவும் எழுமை,எழுபிறப்பு என்றே வருகிறது.

மொத்தம்எத்தனை அறிவு என்று கேட்டால் டக்கெனறு ஆறு என்றுபதில் சொல்வீர்கள். ஆனால் அந்த அறிவு இந்த அறிவு அப்புறம் நீங்கள் கடைசியாகச் சொல்லும் பகுத்தறிவு எல்லாவற்றுக்கும் அப்பால் ஏழாம் அறிவு என்று ஒன்றும் உண்டு. அதுதான் இறைவனை அறியும் அறிவு.
வள்ளுவர் இதனை வாலறிவு என்கிறார்.

திருக்குறளைப் பற்றி அவ்வை பாடியதாகச் சொல்லப் படும்,
அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் - என்ற

பாட்டில் கூட ஏழு கடல் என்று வருகிறது. இந்த அவ்வை சொல்லும் அணுவிலேகூட ஏழு ஷெல்கள் -எலக்ட்ரான்கள் வளையவரும் வளையங்கள் உள்ளன என்றால் பார்ததுக் கொள்ளங்களேன்.

பொருட்பால் காமத்துப் பால் அதிகாரங்களின் கூட்டுத்தொகை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். இஙகே அறத்துப் பாலில்மட்டும் மொத்த அதிகாரங்கள் 38.
இதல் மட்டும் கூடடுத்தொகை11.
அறம் மட்டுமே
செய்தால் போதும் நால்வகைப் பலனும் தானே கூடுதலாகக் கிடைக்கும் என்று காட்டத்தானோ என்னவோ இந்த செவன் ப்ளஸ் போர் ஈக்வல்டு லெவன்.

- மகுடதீபன் 9486102034"