tamil pages of magudadheeban 
 



BIRTH DAY

நேற்று (01-03-2007) எங்க நாட்டு இளைய இராசகுமாரனுக்குப் பிறந்த நாள்.தலைநகரே திமிலோகப் பட்டது. நகரம் எங்கும் சுவரே இல்லை என்னும் அளவுக்குச் சுவரொட்டிகள். மகளிர் அணி, இளைஞர்அணி, கிழவர் அணி, பாப்பாக்கள் அணி என ஆளுக்கு ஆள் போட்டி போட்டுக் கொண்டு ஒட்டினால் சுவர் எங்கே மிஞ்சும்.?
ஊரிலே பிளக்ஸ் போர்ட் பேனர்கள் எல்லாம் இராசகுமாரர் ரெரம்ப வளர்த்தியாகவே வளர்ந்து நின்று கொண்டிருந்தார். இதை விட்டு வேறு எதில் அவர் வளரமுடியும் என்பது வேறு விஷயம். கொடியை நேரே பிடித்தால் தொண்டர் படை, தலைகீழாய்ப் பிடித்தால் . .? அந்த எல்லாப் படைகளும் ஊர்வலமாக வந்து , அதைவிட அந்த அரசில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் எல்லோரும் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள், வாழ்த்துச் சொல்ல வந்திருந்தார்கள், என்பதை விட, அட்டன்டன்ஸ் கொடுக்க வந்திருந்தார்கள், இராசகுமாரனின் கடைக்கண் பார்வை பட்டு ஜன்ம சாபல்யம் எல்லாம் அடைந்தார்கள்.

பூச் செண்டு தருவோர் ஒருபால், பொக்கே தருவோர் ஒருபால், மாலை இடுவோர் ஒருபால், மடல் வாசிப்போர் ஒருபால், எல்லா வற்றையும் மிஞ்சி, சில அடிப் பொடிகள் குருக்கள் சகிதம் வந்திருந்தனர், அதுவும் குருக்கள் கைகளில் பெரிய பெரிய மலர் மாலைகளோடு. இன்று பேப்பரிலே கூட சேய்தி வந்திருந்தது, சுவாமிக்குச் சார்த்திய மாலைகளைக் கொண்டு வந்து இளவரசர்க்குச் சார்த்தினர் என்று.

ஆகா, என்னே பாக்கியம் செய்தனர் எங்கள் கபாலீச்வரரும், பார்த்த சாரதியும் ?
இருவரும் மட்டும் அல்ல, தலை நகரக் கோவிலின் அத்தனை முக்கியச் சுவாமிகளும் த த் த ம் திரு மாலைகளை இளவரசர்க்குத் த த் த ம் செய்து , அன்று சொல்லி வைத்தாற் போலச் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியர்கள் ஆயினர். இத்தனைக்கும் இராசாவும், குமாரரும் ஆத்திகர் அல்லாதவர்கள். ( சமஸ்கிருத த்தில் நாத்திகம் என்றால் ந+ஆத்திகம், அதாவது ஆத்திகம் அல்லது என்றுதானே பொருள் ?)

ஓரிரு மாதம் முன்புதான் மூத்த இளவரசர் பிறந்த நாள் வந்தது. கோவில் நகரம் என்று பேர் பெற்ற மதுரை அன்று பேனர் நகரமாய் மாறிப் போனது. இன்னும் இளவரசி பிறந்தநாள் வரும், அப்புறம், பேரன் பிறந்த நாள், அவர்கள் வளர்க்கும் நாய்க்குட்டி பிறந்த நாள் எல்லாவற்றையும் கொண்டாடிச் சாப விமோச்சனம் பெறத் தங்கத் தமிழகம் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்.?
எனக்கென்னமோ பழைய காலத்து இராசாக்கள் எல்லாம் பிறந்த நாள் கொண்டாடியதாகத் தெரியவில்லை. கொண்டாடி இருந்தால் ஏதாவது ஒரு பூங்குடி பூதனார் கவிதை பாடியிருப்பார், அதையும் புறநானூற்றில் தொகுத்திருப்பார்கள் அல்லது ஏதாவது ஒரு கொட்டக் கூத்தனார் மெய்க்கீர்த்தி பாடி இருப்பார், அப்படி எதுவும் இல்லையே நம் தமிழ் இலக்கியத்தில்.
ஒருவேளை நரசிம்ம பல்லவனின் அப்பா மகேந்தி்ரர் பையனின் பிறந்த தேதியைக் குறித்து வைக்க மறந்து விட்டாரா? மத்த விலாசப் பிரகடனம் மட்டும் எழுதி வைத்துவிட்டுப் போய் வஙிட்டார், நரசிம்மனின் ஜாதகம் எழுதி வைக்க மறந்து விட்டாரோ என்னவோ? அப்படியே பிறந்த நாள் கொண்டாடி இருந்தாலும் நாடு பூராக் கொண்டாடி இருக்குமா? நிச்சயம் இருக்காது.
உலகம் என்பது சாமானியப் பட்டது அல்ல, கண்டவர் பிறந்த நாளை எல்லாம் கொண்டாடுவதற்கு. உலகம் அந்த அளவு சாதாரணமானதும் அல்ல, வருடா வருடம் அந்த அரசர்களின் பிறந்த நாளை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவதற்கு. உலகம் நேற்று நடந்ததை மறந்து விடும். இன்றைக்கு நடப்பது நிசம் ஆகும் நாளை என்பது இன்றையப் போதை அழித்து விடும்.

அலக்ஸாண்டருக்கும் பிறந்த நாள் வரத்தான் வரும் அக்பருக்கும் வரத்தான் வரும். உலகில் தினம் தினம் எவனுக்காவது வரத்தான் வரும் உலகுக்கு அவை எல்லாம் முக்கியம் இல்லை. Men may come and men may go. உலகத்துக்கு அதெல்லாம் முக்கியம் இல்லை.. பேருந்தில் கைக்குட்டை போட்டு இடம் பிடித்து என் இடம் உன் இடம் என இருவர் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திரிப்பீர்கள். அடுத்த நாள் அந்த சீட் யார் இடம்?

தங்கத்திலே க க்கூஸ் பைப் செய்து போட்டு வாழ்க்கையை அநுபவித்தவர்கள் இன்று இல்லை. மக்கள் இருக்கிறார்களே மக்கள், இவர்களுக்கு மறதி ஜாஸ்தி. சத்திய சந்தர்களையே மறந்துவிடும் அளவுக்கு நினைவாற்றல் அதிகம் இம் மக்களுக்கு.

எங்கள் ஊரிலே வழக்கமாக காலை எட்டு மணிக்கு பஞ்சாயத்துக் கட்டிடத்தில் சங்கு ஒலிப்பார்கள், அப்புறம் மதியம் ஒருமணிக்கு, கடைசியில் இரவு ஒன்பது மணிக்கு. அன்று பார்த்து வழக்கத்துக்கு மஆறாக பதினோரு மணிக்கு ஒலித்தார்கள்.

'திடீர் என்று எதற்குச் சங்கு?' - என்று கேட்டார் ஒரு பெரியவர்
இன்னொரு பெரியவர் பதில் சொன்னார்.
'அதுவா, ஏதாவது சங்கு ரிப்பேராப் போயிருக்கும். டெஸ்ட் பண்ணுகிறார்கள் போல் இருக்கிறது '

விசயம் வேறு ஒன்றும் இல்லை. அன்று ஜனவரி 30. அவ்வளவே. இத்தனைக்கும் அந்தப் பெரிசுகள் இரண்டும் இந்தியா சுதந்திரம் அடைந்த போது வளர்ந்து வாலிபராய் இருந்தவர்கள். எதற்குச் சொன்னேன் என்றால் இந்த உலகம் எவ்வளவு சீக்கிரம் எல்லாவற்றையும் மறந்து விடுகிறது என்பதை எடுத்துக் காட்ட.
உலகத்தில் பிறப்பும் இறப்பும் சர்வ சகஜம், மிகச் சாதாரணம். எங்க தாத்தாவையே எனக்குத் தெரியாது, அவர்கள் பிறந்த தேதியும் செத்த தேதியும் நினைவில் இருத்தி என்ன பண்ணப் போகிறேன் நான்.? என் குடும்பக் கதையே இப்படி என்றால் உலகத்தில் உள்ள எல்லா அரசர்களின் பிறந்த இறந்த நாளைக் கொண்டாடி வருவம் என்றால் எல்லா நாளும் பிதிர்க்கடன் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

போனால் போனது போனதுதான் எனக் கவலைப் படாத இவ் வுலகத்தில் இரண்டே இரண்டு பேர்களின் பிறந்த நாள் மட்டும் காலா காலமாய், யுகம் பல போனாலும், ஆட்சிகள் மாறினாலும், யார் வந்தாலும் வராவிட்டாலும், பாரம்பரியப் பண்பாடாய்க் கொண்டாடப் பட்டு வருகிறது என்றால் அவர்கள் இருவரும் சாதாரணமானவர்களா, என்ன?

பிரளயம் வந்தாலும் அவர்களின் நினைவு அழியவில்லை, பூகம்பம் வந்தாலும் அவர்கள் கதை மறையப் போவதும் இல்லை. எத்தனைக் கலாச்சாரச் சீரிழிவு வந்தாலும், எத்தனை அனாச்சாரங்கள் ஆடினாலும் அவர்கள் நடந்த இந்தப் பூமி அவர்கள் கதையை அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொண்டே இருக்கும்.

யார் அவர்கள், என்றால் அவர்கள் தாம் இராமனும், கண்ணபிரானும்.

எங்கே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பாடுங்கள் பார்ப்போம்,

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில் - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய இரரணியின் வில்.

போர்களத் தேபர ஞானமெய்க் கீதை
புகன்ற தெவருடை வாய் - எங்கள்
தீர்க்த் திறம் தரு பேரினள் பாரத
தேவி மலர்த் திரு வாய் .